Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரையும் கண்கலங்க வைத்த… சித்ராவின் இறுதி அஞ்சலி…!!!

பிரபல சின்னதிரை நடிகை சித்ராவின் உடலுக்கு அனைவரும் கண்ணீரோடு அஞ்சலி செய்த காட்சிகள் காண்போரை கலங்கவைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நடிகை சித்ராவின் உடலுக்கு சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் மேலும் சித்ராவின் வளர்ப்பு நாய் அவரது உடலை கண்ணீருடன் கடைசியாக பார்க்கும் காட்சி மனதை உடைப்பது போல அமைந்துள்ளது. இதையடுத்து, சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |