2012 ஆம் ஆண்டு லண்டன் மாரத்தான் ஒலிம்பிக்கில் அபெல் முதாய் Gold Medal வாங்கினார். அதன் பிறகு அதே ஆண்டு ஸ்பெயினில் நடந்த ஒரு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தபோது Finish line- க்கு 10 மீட்டர் முன்பு திடீரென அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அவருக்கு பின் ஓடிக்கொண்டிருந்த ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ அவரைத் திரும்பிப் பார்த்து Keep running keep running என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அபெல் முதாய் ஓட முடியாததை தெரிந்துகொண்ட பெர்னாண்டோ அவருக்கு பின் சென்று அபெல் முதாய்-யை முதலில் ஓட வைத்து அவர் பின்புதான் வந்தார். அதில் அபெல் முதாய் வெற்றி பெற்றார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் ஒருவர், ஏன் அபெல் முதாய்- க்கு முதல் இடத்தை விட்டு கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த பெர்னாண்டோ, அவர் ஒரு ஒலிம்பிக் கோல்டு மெடல் லிஸ்ட், அவரை இப்படி ஒரு சாதாரண சின்ன போட்டியில் தோற்கடிப்பதற்கு நான் தகுதி இல்லாத ஒருவன். அதுமட்டுமல்லாமல் எனது தாயார் யாராவது ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு உதவ வேண்டும் என்று கூறிய வார்த்தை தான் எனக்கு ஞாபகம் வந்தது என்று பதில் கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.