சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில் திருவண்ணாமலைக்கு 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிவலப்பாதையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அங்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் செய்ய விரும்புவோர் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை https://foscos.fssai.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 04175-237416, 98656 89838, 90477 49266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.