Categories
மாநில செய்திகள்

அன்னதான உணவை சாப்பிட நரிக்குறவ பெண்ணுக்கு மறுப்பு: அதே பெண்ணுடன் அன்னதான உணவை உண்ட அமைச்சர் …!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து பின்னர், நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். பின்னர், அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, மனுவாக பெற்றுள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |