அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் அருகே இருக்கும் மதியநல்லூர் அடைக்கலம்காத்தார் முனியசாமி கோவில் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று நடைபெற்றதையொட்டி ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர்ஸ், சில்வர் குடம், மிக்ஸி என பலவகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 25 பேர் காயமடைந்தார்கள். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆறு பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.