Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அண்ணன் ,தம்பி செய்த செயல் …. கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!! 

கூலி  தொழிலாளியை அரிவாளால் வெட்டிய  2 பேரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பழனிசாமியை  மடக்கிய ஆரோக்கியசாமியின் இரு மகன்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மணல்மேடு காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொழிலாளியை வெட்டி தப்பிச் சென்ற அண்ணன் ,தம்பி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |