அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணையில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு இருக்கிறது.
அதனை தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு சொந்தமாக தஞ்சாவூரிலுள்ள தியேட்டர் ஒன்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இத்தகவலை அமலாக்க த்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கின்றனர்.