Categories
அரசியல்

அன்னுர் மாவட்ட கவுன்சிலராக… திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் பதிமூன்று பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55 ஆயிரத்து 280 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் பதிமூன்று பதவிகளில் 13 பதவிகளில் 11 பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் அன்னுரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக நிர்வாகி வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 42 ஆயிரத்து 67 பேர் வாக்களித்திருந்த நிலையில் திமுக ஆதரவு வேட்பாளராகப் போட்டியிட்ட ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். ஒன்பது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது நிலையில் ஆனந்தன் 26 ஆயிரத்து 287 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பசாமி 13,251 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

Categories

Tech |