நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், GSTக்கு அம்மா கண்டிஷன் போட்டாங்க. நாங்க VAT இழப்பீடு 5000 கோடி ரூபாய் ஏமாந்து விட்டோம். அப்போ மத்திய ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் அரசு எங்களை மோசம் பண்ணிட்டு. அதே போல நீங்களும் மோசம் பண்ணிடுவீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் நீங்க ஒரு உத்தரவாதம் கொடுங்க.
தமிழகத்தில் GSTயை அமல்படுத்தணும் என்றால் 14% இழப்பீடு சட்டமாக்கினால் மட்டுமே நாங்கள் GSTயை ஆதரிப்போம் என தெரிவித்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு சட்டம் ஆக்கினார்கள். சட்டமாக மாற்றியதால் மட்டுமே 14% இழப்பீடு வந்து கொண்டு இருக்கின்றது. இதனை பெற்று கொடுத்ததற்காக இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மாநிலமும் நினைத்து பார்க்கவேண்டும் என்றால் அம்மாவை தான் நினைக்கணும்.
இந்த சட்டம் கொண்டு வரவில்லை என்றால் VAT போல இதுவும் கானல் நீராக மாறி இருக்கும். எனவே அனுபவத்தை முன்மாதிரியா வச்சு முடிவெடுத்தோம். அம்மாவை பொறுத்த வரை இதில் எங்களுக்கு முன் அனுபவம் இருக்கு. எங்களுக்கு தேவையில்லை என சொல்லிட்டு, சட்டம் இயற்ற சொன்னார்கள். இன்று சரியாக இழப்பீடு வந்து கொண்டு இருக்கின்றது. அம்மாவால் தான் இன்றும் கிடைத்து கொண்டு இருக்கின்றது.
இதனால் தான் கண்டிஷன் போட்டாங்க. இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பது அண்ணா திமுகவும், அம்மாவும் தான். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலமும் இழப்பீடு பெறுவது அம்மாவால் தான். மக்கள் பாதிக்காத வகையில் பெட்ரோல், டீசல் விலை இருக்க வேண்டும், இதை பார்த்துக்கொள்வது மத்திய அரசின் பொறுப்பு. எனவே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை இருக்கு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.