தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில்,தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
இவ்வாறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், 15 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.