Categories
Uncategorized

அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கமா? மம்தா பானர்ஜி கண்டனம்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் சாரிட்டியின் வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமம் புதுப்பிக்கபடாமல் இருப்பதாகவும், இதனால் அந்த அமைப்பே பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கை முடக்கும் படி க கேட்டுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு நிதி பங்கீட்டு சட்ட உரிமத்தை புதுப்பிக்கக் கோரி மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அளித்த விண்ணப்பங்கள் சில காரணங்களால் டிசம்பர் 25-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமத்தை புதுப்பிக்க மறுஆய்வு விண்ணப்பம் கிடைக்கப் பெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பும் தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப் படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

Categories

Tech |