Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்புடன் குஷி’ சீரியலில் இருந்து விலகிய நடிகை… வெளியான தகவல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால் திடீரென சீரியலில் இருந்து நடிகர், நடிகை யாராவது விலகுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அன்புடன் குஷி சீரியலில் முதலில் நடித்து வந்த நாயகி மாற்றம் செய்யப்பட்டு ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . இந்நிலையில் நடிகை ரேஷ்மா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா ‘கவலைப்படாதீர்கள் அடுத்து ஒரு நல்ல செய்தி வரப்போகிறது’ என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |