பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கிருஷ்ணகுமார் குன்னத் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா, உங்களைப் போன்ற திறமையான பாடகர்களால் தான் வாழ்க்கை இனிமையாகிறது என பதிவிட்டுள்ளார்.