விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன்அவர்களுக்கு அன்பு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விளிம்புநிலை மக்களின் குரலாய் ஒலிக்கும் சமர். தமிழ் தேசிய இனத்தின் உரிமை மீட்பு கழகங்களில் கருத்தியலாகவும், களப்பணிகள் வாயிலாகவும் அயராது பங்காற்றி வரும் அரசியல் பேராளுமை என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.