பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் என இவர்களை பற்றிய வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சோகத்தை மறந்து சிரிக்கவைக்கும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகஊடகங்களில் வைரலாகிறது. தற்போதும் அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிரியாவிடை நிகழ்வின்போது, அந்த ஆசிரியருக்கு போட்ட வேஷத்தால் அவர் பேய் பிடித்ததை போல் காணப்படுகிறார். பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு பிரியா விடை கொடுக்கப்படுவதை வீடியோவில் காண முடிகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் சகஆசிரியர்களும் சேர்ந்து அந்த ஆசிரியரின் முகத்தில் வண்ணத்தை பூசிவிடுகின்றனர்.
அந்த ஆசிரியரை பார்த்தால் அவருக்கே பயம்வரும் அளவிற்கு அவரை மாற்றிவிடுகிறார்கள். தன் ஃபேர்வெல்லில் இவ்வளவு சோகத்துடன் இருக்கும் முதல் ஆசிரியர் இவராகத் தான் இருப்பார் என இணையவாசிகள் கமெண்ட் செய்துள்ளனர். இதற்கிடையில் வீடியோவில் சில மாணவர்கள் அவருக்காக பேர்வெல் சாங் பாடுவதை காண முடிகிறது. சில மாணவர்களோ அவரை பார்த்தபடி நின்றுகொண்டு இருக்கின்றனர். பள்ளி குறித்த இந்த வீடியோ videonation.teb எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. “அன்பு கொஞ்சம் அதிகமாகி விட்டது” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடியோவில், ஆசிரியர் பள்ளியை விட்டு செல்வதால், மாணவர்கள் சோகத்தில் இருப்பது போலவும் தோன்றுகிறது.