தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது அன்பும், நட்பும், பாசமும் என்றென்றும் நிலைத்திருக்க எந்நாளும் இறைவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.