விலங்குகள் மனிதர்களை விட அதிகமான அன்பு கொண்டவை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்பது பொதுவானது. குடும்பத்தில் தாய்க்கு தன் பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். அதனைப் போலவே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்பு என்பது ஒருவர் மீது கட்டாயம் இருக்கும். இவற்றைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அன்பு செலுத்துவது அதிகம். அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும்.
இந்நிலையில் விலங்குகள் மனிதர்களை விட அளவு கடந்த அன்பு செலுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வனப்பகுதிக்கு அருகில் உள்ள கடைக்கு ஒரு மான் வந்துள்ளது. அந்த கடைக்காரர் மானுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு விட்டு கடையை விட்டு வெளியேறிய மான், சிறிது நேரத்திற்கு பிறகு தன் குடும்பத்தையே கடைக்கு அழைத்து வந்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.