Categories
மாநில செய்திகள்

“அன்பு மகனை இழந்து தவிப்பு” எப்படி ஆறுதல் சொல்வேன்…? இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும் ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் மகன் கருணா சாகர் (24 ). இந்நிலையில் இன்று காலை கருணா சாகர் கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியது. இதில் கருணா சாகர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பெருங்களூர் மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் அதிவேகமாக கார் இயக்கப்பட்டது தான் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக மேலும் விசாரணையில்போலீசார்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் மகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரகாஷ் மகன் கருணா சாகர் உயிரிழந்தது குறித்து அறிந்ததும் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையயையும் அளித்தது. கோர விபத்துக்கு தன்னுடைய மகனை பறிகொடுத்த கழக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்க்கு எப்படி என்னுடைய ஆறுதலைத் தெரிவிப்பது? என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |