தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், 2016ல் சிலிண்டருக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சொன்னபோது, அதை எதிர்த்த ஸ்டாலின், தற்போது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூறுகிறார். திமுக அரசின் இரட்டை வேடத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று சாடியள்ளார்.