Categories
சினிமா

அன்று காதல் பண்ணியது… உந்தன் கண்ணம் கிள்ளியது… ரஜினியின் சொல்ல மறந்த காதல் கதை…!!!!

தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்தார். இதுவே தனக்கு போதுமானது என கருதிய ரஜினியை கமல் நீ தனியாக நடி உனக்குள் பல திறமைகள் இருக்கின்றது என அறிவுறுத்தியுள்ளார். பிறகு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். பிறகு ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார். அப்போது ரஜினியின் பேட்டிக்காக லதா அவரை சந்திக்க வந்துள்ளார்.

லதா இயக்குனர் மகேந்திரனின் உறவுக்காரப் பெண்மணி. அதனால் ரஜினியைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ரஜினியும் லதாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அதுவரை ரஜினி காதல், கல்யாணம் பற்றி எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தார். லதாவை பார்த்த முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்தார் ரஜனி. பின்பு இருவரும் காதலித்தனர். அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் ரஜினியின் குருவான கே.பாலசந்தரிடம் லதாவை அழைத்து சென்று திருமண செய்தியை கூறியிருக்கின்றார் ரஜினி. இதைக்கேட்ட பாலச்சந்தர் மகிழ்ச்சி அடைந்ததோடு திருமணம் செய்தால் உனக்கு மேலும் பொறுப்பு வரும் என கூறி இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |