Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்று சீதை…. இன்று சின்னம்மா…. இபிஎஸ்-க்கு சாபம்….. மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வேகம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் மாவட்டம்தோறும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி சசிகலா தனது ஆதரவை OPS க்கு வழங்குவார் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அன்று சீதை வடித்த கண்ணீரால் இலங்கை அழிந்தது. இன்று சின்னம்மா வடித்த கண்ணீரால் எடப்பாடி கூட்டம் அழியும். வாழ்க சின்னம்மா… வளர்க ஓபிஎஸ் என்ற வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |