Categories
சினிமா தமிழ் சினிமா

அன்று தோடி ராகம்…. “இன்று மோடி ராகம்” எதுனாலும் ஹிட் தான்…. பேரரசு இளையராஜாவுக்கு ஆதரவு…!!!!

புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.  அம்பேத்கருடன் மோடியைப் ஒப்பிட்டதால் கடந்த இரண்டு நாட்களாக இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர் பேரரசு பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், வருஷம் பதினாறு என்ற படத்தில் கங்கைக்கரை மன்னனடி என்ற பாடலை இசைஞானி அவர்கள் தோடி ராகத்தில் பாடியது பெரிய ஹிட் அடித்தது. இளையராஜா தோடி ராகத்தில் போட்டாலும், மோடி ராகத்தில் போட்டாலும் எல்லாமே ஹிட் தான் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |