Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அபயகுரல் எழுப்பிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் பகுதியில் ஸ்ரீ ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி தொழிலாளியான ஹரிஹரன் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ஹரிஹரன் காவிரி ஆற்றில் தவறி விழுந்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பேரிடர் மீட்பு குழு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையிலான வீரர்கள் ஸ்ரீ ஹரிஹரனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |