சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறையில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் என்பதால் சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா இன்று செலுத்தியுள்ளார். பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அபராத தொகையை சசிகலா வழக்கறிஞர்கள் செலுத்தியுள்ளார். அதனால் சசிகலா மிக விரைவில் வெளியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.