பெரு தலைநகர் லிமாவில் ஊரடங்கு விதியை மீறிய இளம்பெண்ணிடம் காவலர் அபாரதத்திற்கு பதிலாக முத்தம் கேட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது வெறும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகள் குரல்வளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது பெருவின் தலைநகர் லிமாவில் இளம்பெண் ஒருவர் வாகனத்தில் சென்றிருக்கிறார். அவரை நிறுத்திய காவல்துறையினர் விதிமுறையை மீறியதற்காக அபராதம் விதிக்க முயன்றபோது ஒரு காவலர் அதனை தடுத்ததோடு அப்பெண்ணிடம் அபாரதத்திற்கு பதிலாக முத்தம் தருமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பெண் காவலரின் அருகே நெருக்கமாக சென்று முத்தம் கொடுத்துள்ளார். இதனை அருகில் இருந்த கட்டிடத்தில் நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இணையதளங்களில் இந்த வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பரபரப்பை ஏற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.