அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ள உத்தரவை வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பான துறையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோக்ராபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட்சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் மற்றும் க்ளோர்பிரிபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து 3 சதவீதம் மஞ்சள் பாஸ்போர்ட் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும், இதை உற்பத்தி செய்வதற்கு, விற்பதற்கு மற்றும் சேமித்து வைப்பதற்கும் தடை விதிக்க கேட்டுக் கொண்டிருந்தார். தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக மனிதர்களுக்கும் விலகினங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனை தொடர்ந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய உயர்நிலைக் குழு கூடி விவாதித்துள்ளது. இந்த குழுவின் முடிவுகள் அடிப்படையில் தான் 60 நாட்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.