ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தலையீட்டு 3 ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தங்களது படைகளை குவித்து வருகிறது.
இதனால் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டிற்கு உக்ரைன் விவகாரம் தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது அமெரிக்காவின் தற்போதைய அரசு உக்ரேன் விவகாரத்தில் தொடர்ந்து பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் 3 ஆம் உலகப்போர் ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் எல்லையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று யோசிக்கணுமே தவிர உக்ரேனின் எல்லையை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.