Categories
உலக செய்திகள்

அபாய எச்சரிக்கை… இரண்டு மாதங்களுக்கு… பெய்யும் மழை ஒரே நாளில்…!!

பிரிட்டனின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கு பெய்ய இருக்கும் மழையானது ஒரு நாளில் பெய்ய இருப்பதால் பிரிட்டனின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக லீட்ஸ், மான்செஸ்டர் ஷ்பீல்ட் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது நாளை காலையில் 6 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும், வேல்ஸிலும் வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அபாயகரமான இடங்களில் வசித்து வரும் மக்கள் பெரும் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |