Categories
உலக செய்திகள்

அபுதாபியில் 3 – 17 வயதுடையவர்களுக்கு….. சினோபார்ம் தடுப்பூசி ஆய்வு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமீரகத்தில் 3 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 3 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு சினோ பார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு நடந்து வருகிறது.

Categories

Tech |