அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்த அபுதாபி பட்டத்து இளவரசருக்கு நோபல்பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டினுடைய இமாம்கள் பேரவைத் தலைவர் ஹசன் அல் சல்கூமி கூறுகையில், ” அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இதன்மூலம் உலகில் அரபுகள் மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதை அதிக அளவு உயர்ந்துள்ளது. அது மட்டுமன்றி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு வழிவகுக்கும். இதன்மூலம் அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணியில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அது மட்டுமன்றி பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமானவர் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்.
அதன் காரணமாக அவரின் பெயரை உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல் அமைதிப் பரிசு கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பரிசு அவருக்கு தகுதியான ஒரு சிறந்த பரிசு. அதற்கான பணிகளை ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த பரிசு அபுதாபி பட்டத்து இளவரசருக்கு கிடைக்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.