Categories
உலக செய்திகள்

அபூர்வ இரட்டை பிறவி யானைக்குட்டிகள்…. ஒன்றாகவே இறந்ததால்…. வனக்காவலர்கள் சோகம்…!!

இரட்டை யானைக்குட்டிகள் இரண்டும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மின்னேரியா தேசிய பூங்கா ஒன்றில் யானை ஒன்று அரியவகை இரட்டை யானைக்குட்டிகளை ஈனியுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் இரட்டைக்குட்டிகள் சந்தோசமாக பூங்காவில் உலா வந்துள்ளன. இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, இதுபோன்று இனியும் இரட்டைக்குட்டிகள் பிறக்கலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த இரண்டு யானைக்குட்டிகளும் மஹாசேனபுரா என்ற இடத்தில இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து யானைகளின் இறப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. மேலும் யானைகளின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் இரண்டு அழகான யானை குட்டிகள் அருகருகே இறந்து கிடந்த காட்சி காண்போரின் மனதை கணக்க செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |