அரசின் சார்பாக பணம் திரட்டி குழந்தைகளுக்கான மருத்துவ செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
அபூர்வ நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தனி நபர்களால் மிகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடிகின்றது. மாநில அரசு நினைத்தால் நிச்சயம் இதனை செயல்படுத்த முடியும். இதற்கான நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தந்தை கேரளா கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் அந்த சிறுவனின் உயிர்காக்க அமெரிக்காவிலிருந்து மருந்து கொண்டு வர வேண்டி இருந்தது. இதற்காக பண உதவி மற்றும் பிற உதவிகளுக்காக மாநில அரசு சார்பில் உதவ முன்வர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு குழந்தையின் நோயை குணப்படுத்த 18 கோடி திரட்டப்பட்டது. அரசின் சார்பில் இதற்காக ஒரு நடைமுறை ஏற்படுத்தப்பட்டால் திரட்டப்படும் நிதியை சேமித்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தது. மக்களிடம் அரசின் சார்பில் ஏற்படுத்தப்படும் நடைமுறையின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். மேலும் அது பயன்படக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.