Categories
தேசிய செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… “கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் நோய் குணமாகாத காரணத்தினால் அபிநயாவின் இரண்டு கால்களையும் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் “ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

அதனால் தமிழக அரசு தன்னை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி” வருகிறது. இது குறித்து அவரது தாய் கனிமொழி கூறியதாவது, கூலிதொழில் செய்து எனது மகன், மகளை காப்பாற்றி வந்த நிலையில் தற்போது அபிநயாவிற்கு செலவு அதிகமாகின்றது. அதனால் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |