Categories
சினிமா தமிழ் சினிமா

அப்செட்டான அஜித் ரசிகர்கள்…. பிரச்சனையை தீர்த்த விநியோகஸ்தர்…. ரசிகர்கள் ஹாப்பியோ ஹாப்பி…!!!

ரோகினி திரையரங்கில் வலிமை படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது தீர்க்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பின்னர் வினோத் இயக்கத்தில் மீண்டும் இணையும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படமானது சென்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பினால் படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் வலிமை திரைப்படமானது நாளை ரிலீசாக இருக்கின்றது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வலிமை படத்தின் உரிமையை கலைமகன் முபாரக் அவர்களுடைய ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமானது பெற்றிருக்கின்றது. இவர் நேற்று காலை 4 மணி முதல் 7 மணி காட்சி திரையரங்கில் வெளியாகாது என்று கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ரோகினி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய கலைமகன் 4 முதல் 7 மணி காட்சி ஒளிபரப்பாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் “வலிமை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுங்கள், தெறிக்க விடலாமா” என பதிவிட்டிருக்கிறார். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |