Categories
தேசிய செய்திகள்

அப்துல் கலாம் சாதனைகள்… நாளைய தலைமுறைக்கு வழிகாட்டி… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

அப்துல் கலாம் சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய தலைமுறையினரையும் நல்வழிப்படுத்துவதற்கு உதவும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் அப்துல் கலாம் தான். அவரின் சாதனைகளும் தொலைநோக்கு பார்வையும் நாளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த உதவும்.ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக அப்துல் கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வறுமையான வினையூக்கி”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |