மது ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் கைப்பற்றிய 3000 லிட்டர் சரக்கை வாய்க்காலில் ஊற்றிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். மேலும் அவர்கள் தலிபான்களின் தலைவரான முல்லா அகுந்த் தலைமையில் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.
இதனையடுத்து தலிபான்களின் புதிய அரசாங்கம் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தலிபான்கள் அந்நாட்டில் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளார்கள்.
அதாவது இஸ்லாமியர்கள் மது அருந்தவோ, தயாரிக்கவும் கூடாது என்று கருதும் தலிபான்கள் சரக்கை ஒழிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதன்படி தலைநகர் காபுலில் மது கடத்திய 3 பேரை கைது செய்த தலிபான்கள் அவர்களிடமிருந்து 3,000 லிட்டர் சரக்கை பறிமுதல் செய்துள்ளார்கள்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 3,000 லிட்டர் மதுவை தலிபான்கள் அருகிலிருந்த வாய்க்கால் ஒன்றில் ஊற்றி அழித்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.