Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு…! இனி இந்த அரசு தேர்விலும்…. தமிழ் மொழித்தேர்வு கட்டாயம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலாத்தவர்கள் தான் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில் டிஎன்பிசி தேர்வில் தமிழ் மொழி தேர்வானது கட்டாயமாகப் பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி நடப்பு வருடத்தில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.

இதனையடுத்து தமிழகத்தில் மத்திய அரசின் நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம், விமான நிலையங்கள் உள்ளிட்ட துறைகளிலும் பெரும்பாலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு வந்தது. அதனால் இதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகள் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்தில் காலியாக உள்ள 1021 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இந்த பணி இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் விதமாக தமிழ் மொழி தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |