இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில்கூட சீனநாட்டின் நிறுவன மொபைல் செயலி 59 அப்_களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல் அதேபோல் தற்போது மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதைஅனுமதிக்க மாட்டோம். கூட்டு திட்டமாக இருந்தாலும் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் சீனா அரண்டு போயுள்ளது.