Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம்…. புத்தாண்டில் அடித்தது ஜாக்பாட்…. சூப்பர் தகவல்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அந்த நிலுவைத் தொகை தற்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான மற்றொரு அறிவிப்பு தற்போது வெளியானது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்வுடன் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரூ.5,580- ஆக உயர்ந்தது.அதாவது அடிப்படை சம்பளம் 18 ரூபாயிலிருந்து 31 சதவீதம். அகவிலைப்படி உயர்த்தப்பட்டது முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டில் அகவிலைப்படி நிலுவைத் தொகை முழுவதும் ஒரே அடியாக வழங்கப்படும் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையில் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |