Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! “இதுல எதாவது உள்குத்து இருக்கா”…? ரஷ்யா-பெலாரஸ் “கூட்டு போர் பயிற்சி” நீட்டிப்பு…. வெளியான அதிரடி தகவல்….!!

ரஷ்யா-பெலாரஸ் ராணுவ கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் நீண்ட தெற்கு எல்லையை பகிர்ந்துள்ள பெலாரஸ் ராணுவத்துடன் இணைந்து 10 நாட்கள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக பெலாரசின் விக்டர் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெலாரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் விக்டர் கூறியதாவது, ரஷ்யா மற்றும் தங்கள் நாட்டு நாடுகளின் எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. ஆகையினால் ரஷ்யா பெலாரஸ் நாடுகளின் கூட்டு போர் பயிற்சி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான படைகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |