மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். எத்தகைய செய்தியாக இருந்தாலும் தாய் மொழியில் விளக்கம் தர வேண்டும் என்று மத்திய அரசு இந்தியில் பதில் தந்ததாக சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறிய நீதிபதிகள் அடிப்படைக் கல்வியும் தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் பழமையையும் உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.