தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை ,பருப்பு, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி உடனே வழங்கவேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக வழங்க வேண்டிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.