பல்கேரிய அரசு உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளது.
உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அதன்படி பல்கேரிய அரசு அதிரடியான தடை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.
இதனை பல்கேரியாவை சார்ந்த கடல்சார் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும் உணவுப் பொருள்கள், ஆபத்தில் உள்ள கப்பல்கள் போன்ற சிலவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.