அரசு ஊழியர்கள் ஊழல் முறைகேடு செய்தால் அவர்கள் மீது புகார் செய்ய ஆன்லைன் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகவும்,.மின்னஞ்சல் மூலமாகவும் தரப்பட்டு வந்த மனுக்கள் லோக்பால் இணையதளத்தின் மூலம் பெறப்படும் என்றும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று நீதிபதி அபிலாஷா குமாரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எளிய முறையில் இருக்கும். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறியுள்ளார்.