Categories
சினிமா

அப்படிப்போடு!… “காந்தாரா” படம் குறித்து புது அப்டேட்….. விரைவில் ரசிகர்களுக்கு வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

கன்னட மொழியில் சென்ற செப்டம்பர் 30ம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து இருந்த படம் “காந்தாரா”. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி.அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்து கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் கன்னட மொழியில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது.

அத்துடன் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய்.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இப்போது இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி தூள்கிளப்பி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளில் இயக்குனர் இறங்கி யுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இது தொடர்பான அதிகாரம்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |