Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. கெத்து காட்டும் ஜியோ…. சறுக்கிய வோடஃபோன்….!!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 3,795 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 8.8% அதிகமாகும். ஜியோவின் மொத்த வருவாய் 5.76 சதவீதம் அதிகரித்து ரூபாய் 22,858 கோடியாக இருக்கிறது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் வோடஃபோன் ஐடியா நஷ்டம் ரூபாய் 7,231 கோடியாக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 24 கோடியே 72 லட்சமாக குறைந்துள்ளது.

Categories

Tech |