சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் இணைவார்களா…? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்தனர். இது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் பேசி சமந்தாவையும் நாகசைதன்யாவையும் சேர்த்து வைக்குமாறு கூறினர். ஏற்கனவே இது பற்றி ரசிகர்கள் நாகார்ஜுனாவிடம் கேட்டபோது “சமந்தா எங்கள் வீட்டை விட்டு சென்றாலும் அவர் என் மகள்தான்..!” என நாகார்ஜுனா கூறியிருந்தார்.
இது ரசிகர்கள் பலரை கவர்ந்தது தொடர்ந்த நாக சைதன்யாவும், “நானும் சமந்தாவும் தான் பெஸ்ட் ரீல் ஜோடி” என கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இதனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் சமந்தா சைக்கிளிங், எக்சசைஸ், ஒர்க்கவுட் போன்று தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார். மேலும் அவர் நாகார்ஜுனா கைப்பற்றி பேசுவது கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.