22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா அந்தநாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பெருந்தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி சீனாவிலும் கடந்து 2020ஆம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் சீன பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். இதனையடுத்து இந்திய மாணவர்கள் தற்போது சீனாவிற்கு சென்று தங்களது படிப்பை தொடர முற்பட்டுள்ளார்கள்.
ஆனால் கொரோனா அதிகரித்து வருவதால் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா தடைவிதித்துள்ளது. இதனால் 22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பாக சீன அரசு இணக்கமான முடிவை எடுக்கும்படி அந்நாட்டிடம் இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டுகொள்ளாத சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது இந்தியா அந்நாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.