தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் பல்வேறு துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். அவ்வாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் மின் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. இதனிடையில் மின் வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் மின் வாரியத்துக்கு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி மாதம் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதனால் தேர்தல் முடியும் வரையிலும் மின்தடை ஏற்படக்கூடாது எனவும் அத்துடன் தமிழகம் முழுவதும் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாமல் இருப்பதை மின்வாரிய பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்தடை இல்லை என்பதால் மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட மின்தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்பின் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டால் இது தொடர்பான 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் 9445850811 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் (அ) 044-28521109, 044-28524422 என்ற எண்களுக்கும் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம்.