Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! பிரபல நடிகையுடன் கொண்டாட்டத்தில் தனுஷ்…. அப்செட்டான படக்குழு…. கசிந்த புகைப்படம்….!!

படப்பிடிப்பு தளத்திலிருந்து நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஒரு திருவிழாவில் நடனமாடுவது போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் திருச்சிற்றம்பலத்தில் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அனிருத் இசையமைக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஒரு திருவிழாவில் நடனமாடுவது போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு மிகவும் கடுமையான அப்செட்டில் உள்ளது.

இதற்கிடையே தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் தமிழ் தெலுங்கில் உருவாகும் வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறிருக்க இவரது நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை அளித்துள்ளது. ஆகையினால் இவர் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். எனவே தனுஷின் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் மீண்டும் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |